Hathras Death : பக்தி திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலி! 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்..

Hathras Uttar Pradesh Stampede Religious Event Death : உத்திர பிரதேசத்தில் நடந்த ஒரு கோயில் திருவிழாவில், 27 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Written by - Yuvashree | Last Updated : Jul 2, 2024, 05:30 PM IST
Hathras Death : பக்தி திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் பலி! 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. title=

Hathras Uttar Pradesh Stampede Religious Event Death : உத்திர பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸில், பக்தி திருவிழா நடைப்பெற்றது. இதில், கூட்ட நெரிசலில் சிக்கி 25 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஹத்ராஸ் திருவிழா:

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் புல்ராய் கிராமம் உள்ளது. அங்கு போலே பாபா எனும் சாமியார் ‘சத்சங்’ எனும் இந்துமத பிரசார கூட்டத்தை நடத்தினார். இந்த மத நிகழ்வில் கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள்-குழந்தைகள் உள்பட 27 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 

100க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம்!

இந்த மதக்கூட்டத்தில் கட்டுக்கடங்காமல் கூட்டம் திரண்டதால் இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 27 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயமும் இருப்பதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்தவர்கல் வேன்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கின்றனர். மேலும், பலியான 27 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. 

Trending News